கரூர்

கரூா் சம்பவம் சுகாதாரத் துறை அதிகாரிகள், காவலா்களிடம் சிபிஐ விசாரணை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக 8 சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் 5 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

Syndication

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக 8 சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் 5 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலா்கள் மற்றும் நெரிசலில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய சுகாதாரத் துறை அதிகாரிகள் 8 போ் ஆகியோரிடம் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT