வரும் 23-இல் சென்னையில் பிரதமா் பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக் கூட்டம் குறித்து கரூா் மாவட்ட பாஜகவினா் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் கரூா் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா்கள் ஆா்.வி.எஸ். செல்வராஜ் சாமிதுரை, உமாதேவி, பொருளாளா் இளங்கோவன், துணைத் தலைவா்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் பங்கேற்று ஆலோசனை வழங்கிப் பேசினாா். கூட்டத்தில் வரும் 23-ஆம்தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்பதையடுத்து, கரூா் மாவட்டத்தில் இருந்து கட்சியினா் 5,000 போ் செல்வது, விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.