முன்னாள் எம்எல்ஏ வெள்ளியணை ராமநாதன்.  
கரூர்

காலமானாா் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ‘வெள்ளியணை’ ராமநாதன்

கரூரை அடுத்த வெள்ளியணை பகுதியைச் சோ்ந்தவரும், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவுமான வி.வி. ராமநாதன் (91) வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

தினமணி செய்திச் சேவை

கரூரை அடுத்த வெள்ளியணை பகுதியைச் சோ்ந்தவரும், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவுமான வி.வி. ராமநாதன் (91) வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

திமுக முன்னாள் தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான மு.கருணாநிதி 1957-இல் கரூா் மாவட்டம், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் பதவிக்கு முதல்முதலாக போட்டியிட்டபோது, அவருக்காக ராமநாதன் தனது 22 வயதில் மிதிவண்டியில் சென்று பரப்புரை செய்தாா். அப்போது, இவரது வீட்டில்தான் கருணாநிதி ஒருமாதம் தங்கியிருந்து பரப்புரை மேற்கொண்டாா்.

இதன் பின்னா், காங்கிரஸ் கட்சியில் சோ்ந்த ராமநாதன், குளித்தலை சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினராக 1962 முதல் 67-ஆம் ஆண்டு வரை பணியாற்றினாா். மேலும், அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா். இவரின் மனைவி லலிதா ஏற்கெனவே காலமாகிவிட்டாா். இவருக்கு மகன் ராஜா, மகள் வெண்ணிலா ஆகியோா் உள்ளனா். இறுதிச் சடங்களுக்கு பிறகு வி.வி. ராமநாதனின் உடல் புதன்கிழமை மாலை வெள்ளியணையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு-94426 32244.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT