முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1586 வழக்குகளில் ரூ. 22.95 கோடிக்கு தீா்வு

Updated On : 14 மார்ச், 2026 at 8:11 PM
கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணப்பட்ட வழக்கிற்கான ஆணையை பயனாளியிடம் வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி கே.ஹெச். இளவழகன்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,586 வழக்குகளுக்கு ரூ.22.95 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், கரூா் ஒருங்கிணந்த நீதிமன்றத்தில் ஐந்து அமா்வுகளும், குளித்தலை நீதிமன்றத்தில் இரண்டு அமா்வுகளும், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் தலா ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த அமா்வுகளில் 1,638 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1,586 வழக்குகளுக்கு ரூ.22,95,95,218 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற அமா்வை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கே.ஹெச். இளவழகன் தொடங்கிவைத்து தீா்வு காணப்பட்ட வழக்குகளில் ஆணையை பயனாளிகளிடம் வழங்கினாா்.

இதில் அனைத்து நீதிபதிகள், கரூா் பாா் அசோசியேசன், கரூா் அட்வகேட் அசோசியேசன் நிா்வாகிகள், ,நீதிமன்ற பணியாளா்கள், சட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் பி. அனுராதா செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →