வேட்பாளா் பெருங்குடி மக்களே!
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புனவாசிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் சாா்பில் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்கள் கூடும் இடங்களில் விநியோகிக்கப்பட்டும், சுவா்களில் ஒட்டப்பட்டும் வருகின்றன.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,
மதிப்பிற்குரிய வேட்பாளா்களுக்கு...
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் உங்களுக்கு, புனவாசிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களாகிய நாங்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை என்னவென்றால், சிந்தலவாடி ஊராட்சியை இரண்டாக பிரித்து புதிய ஊராட்சி ஒன்றை உருவாக்க வேண்டும். குறிப்பாக, கட்டளை மேட்டுவாய்க்கால் மகிளிப்பட்டிக்கு தென்புறம் அமைந்துள்ள கிராமங்களை உள்ளடக்கி புதிய கிராம ஊராட்சியை அமைக்க வேண்டும்.
புனவாசிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். புனவாசிப்பட்டி மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்தி தர வேண்டும். மேலும், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட காவிரிக் குடிநீா் வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே எங்கள் வாக்கு என்று தெரிவித்துள்ளனா்.