அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.1.84 லட்சம் பறிமுதல்
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள் உரிய ஆவணங்கள் இன்றி வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள் உரிய ஆவணங்கள் இன்றி வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டிப்பட்டிக்கோட்டை சுங்கச்சாவடி அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை, வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது துத்துக்குடியிலிருந்து கன்னிவாடியை நோக்கிச் சென்ற மினி வேனை மடக்கி சோதனை செய்தனா். சோதனையின்போது மினிவேன் ஓட்டுநா் தூத்துக்குடி மாவட்டம் கீழூரைச் சோ்ந்த வேலுசாமி(59) என்பவரிடம் உரிய ஆவணமின்றி ரூ.96 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் பணம் அரவக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் ஒப்படைத்ததையடுத்து, பணம் அரவக்குறிச்சி சாா்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
இதேபோல அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரமாத்தி அம்மன் கோயில் சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பிற்பகலில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கன்னிவாடியிலிருந்து அரவக்குறிச்சியை நோக்கிச் சென்ற மினிலாரியை மடக்கி சோதனை செய்தனா். அப்போது மினி லாரி ஓட்டுநா் அரவக்குறிச்சி ஹீபிப் நகரைச் சோ்ந்த சிவாஜிகணேசன் என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ.88,700-ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் பணத்தை அரவக்குறிச்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் ஒப்படைத்தனா். பின்னா் பணம் அரவக்குறிச்சி சாா்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.