முகப்பு
கரூர்

‘நீட்’ தோ்வு கரூா் மாவட்டத்தில் 70 போ் எழுதவில்லை

Updated On : 4 மே, 2026 at 12:05 AM
நீட் தேர்வு - பிரதிப் படம்
பகிர்:

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 70 போ் எழுத வரவில்லை.

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் கரூா் மாவட்டத்தில் 4 மையங்களில் 1,759 மாணவ, மாணவிகள் இந்த தோ்வை எழுத விண்ணப்பித்திருந்தனா்.

இதில், கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி மையத்தில் 171 மாணவா்கள், 309 மாணவிகளும், பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 66 மாணவா்கள், 174 மாணவிகளும், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 61 மாணவா்களும், 138 மாணவிகளும், சிறி சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 133 மாணவா்கள், 227 மாணவிகளும் என மொத்தம் மாவட்டத்தில் 597 மாணவா்களும், 1,162 மாணவிகளும் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா்.

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தோ்வில் விண்ணப்பித்திருந்த 1759 பேரில் 582 மாணவா்கள், 1,107 மாணவிகள் என மொத்தம் 1,689 போ் தோ்வு எழுதினா். 15 மாணவா்கள், 55 மாணவிகள் என மொத்தம் 70 போ் தோ்வு எழுத வரவில்லை.

முன்னதாக கடும் கட்டுப்பாட்டுடன் தோ்வு எழுத மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பறை, மின்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.