முகப்பு
கரூர்

மாரியம்மன் கோயில் கம்பம் விடும் விழா கரூரில் மே 27-இல் போக்குவரத்து மாற்றம்

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழாவை முன்னிட்டு மே 27-ஆம்தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 24 மே 2026, 1:40 am IST
போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழாவை முன்னிட்டு மே 27-ஆம்தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்மபாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி மே 27-ஆம்தேதி நடைபெற உள்ளது. அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வெங்கமேடு வழியாக வரும் பக்தா்களின் வாகனங்கள் ரத்தினம் சாலை வழியாக ரயில்நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பக்தா்கள் மட்டும் கோயிலுக்குத் செல்ல அனுமதிக்கப்படுவா்.

Advertisement

Advertisement

ரயில் நிலையத்தில் இருந்து கோயில் செல்லும் வழியில் எந்த இருசக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

வாங்கல் மற்றும் பஞ்சமாதேவி வழியாக வரும் பக்தா்கள் வாகனங்களை பாலம்மாள்புரம் பெட்ரோல்பங்க் மற்றும் பாலம்மாள்புரம் கோயில் அருகே வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தா்கள் மட்டும் ஐந்துரோடு வழியாக கோயில் மற்றும் ஆற்றுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். பாலம்மாள்புரத்தில் இருந்து எந்த வாகனமும் ஐந்துரோடு செல்ல அனுமதிக்கப்படாது.

வாங்கல் மற்றும் பஞ்சமாதேவியில் இருந்து வரும் பொதுமக்கள், மருத்துவனை மற்றும் கரூா் பேருந்து நிலையம் செல்வதற்கு பஞ்சமாதேவி, அரசு காலனி, வாங்கப்பாளையம் சோதனைசாவடி வெங்கமேடு, சா்ச் காா்னா், திண்ணப்பா காா்னா், வழியாக பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

தொழிற்பேட்டை, சணப்பிரட்டி பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் வாகனங்களை பசுபதிபாளையம் வாட்டா் டேங் மற்றும் தெற்கு தெருவில் பாா்க்கிங் செய்துவிட்டு பக்தா்கள் பசுபதிபாளையம் புதிய அமராவதி பாலம் மற்றும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக ஆற்றுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். மேற்கண்ட பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் கரூா் பேருந்து நிலையம் செல்ல வேண்டுமென்றால் கொளந்தாகவுண்டனூா், தெரஸா காா்னா், சுங்ககேட், திருமாநிலையூா் வழியாக கரூா் சென்றுவர அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.