பெரம்பலூர்

உணவில் கலப்படம் குறித்து புகார் அளிக்கலாம்

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் கலப்பட உணவுப்பொருள்கள் விற்பனை செய்வோர் குறித்து புகார் அளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி, உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறிய, பெரிய வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுசெய்து அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 இந்தச் சட்டத்தின் படி உணவகங்கள், டீ கடைகள், உணவுப் பொருள்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் அனுமதி பெற வேண்டுமென உணவுப் பாதுகாப்புத்துறை வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், கலப்பட உணவுப்பொருள்கள் விற்பனை செய்வது பரவலாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் தரமற்ற, கலப்படப் பொருள்கள் விற்பனை செய்வோர் குறித்து பொதுமக்கள் கட்செவிஅஞ்சல் மூலம் புகார் தெரிவிக்க உணவுப் பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்தப் புகார்களின் மீது சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் நேரில் சென்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்வோர் குறித்த தகவல்களை 94440 42322
என்ற கட்செவி அஞ்சல் எண் மூலம் தொடர்புகொண்டு, சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை மாநில ஆணையர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
அந்தப்புகார் குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை சென்னை மாநில ஆணையருக்கு அனுப்பி வைப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT