பெரம்பலூர்

ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா

DIN

பெரம்பலூரில் அமைந்துள்ள ஐயப்பன் திருக்கோயில் மற்றும் விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் மற்றும் விநாயகர் திருக்கோவில் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த 7 ஆம் தேதி கணபதி ஹோமம், புன்யா வஹனம், வாஸ்து சாந்தி பூஜைகளோடு, யாகசாலை வேள்விகள் தொடங்கியது. தொடர்ந்து யாக வேள்வியில் பல்வேறு வகையான மூலிகைப் பொருள்களை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வியாழக்கிழமை திரவ்யா ஹீதி மற்றும் நாடி சந்தனம் பூஜைகளுக்கு பிறகு பூர்ணா ஹூதி பூஜைகள் நடத்தப்பட்டு,  
யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடுடன் கோபுர விமானத்துக்கு புனிதநீர் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ஐயப்பன் மற்றும் விநாயகர் கோயில் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. குடமுழுக்கு விழாவில், பெரம்பலூர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT