பெரம்பலூர்

செல்போன் பழுது நீக்க இலவச பயிற்சி பெறலாம்

DIN

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ்  வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அக். 11 முதல் செல்போன் பழுது நீக்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி பெற 18 முதல் 40 வயதுக்கு குறைவாக, குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
30 நாள்  பயிற்சின்போது, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.  பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள  வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம்  விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ்  நகல், 4 பாஸ்போர்ட் அளவு, 1 ஸ்டாம்ப் அளவு போட்டோ ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து, அக். 10-க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ் முதல்மாடி, மதனகோபாலபுரம், பெரம்பலூர். 04328- 277896.  பயிற்சி மைய இயக்குநர் டி.எஸ். ராஜகோபாலன்  செவ்வாய்க்கிழமை  இதைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT