பெரம்பலூர்

பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

பெரம்பலூர் அருகே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பெரம்பலூர் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்கிராம மக்கள் சார்பில், பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கருப்பையாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: பெரம்பலூர் அருகே வேலூர் ஊராட்சிக்குள்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில் உள்ள மின்மாற்றியிலிருந்து விவசாய மின் மோட்டார்களுக்கும், வீடுகளுக்கும், குடிநீர் மோட்டார்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மின்மாற்றி பழுதடைந்து 10 நாள்களுக்கு மேலாகிறது. இதனால், மின்சாரம் இல்லாமல் விவசாய மோட்டார்கள், குடிநீர் மோட்டார்கள் இயக்க முடியாமலும், குடிநீர் வசதியின்றி, விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சமுடியாமலும் அவதிப்படுகிறோம். எனவே, பழுதடைந்துள்ள மின்மாற்றியை மாற்றியமைத்து மின் விநியோகம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT