பெரம்பலூர்

"செட்டாப் பாக்ஸ்களுக்கு கட்டணம் கேட்டால் புகார் அளிக்கலாம்'

DIN

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க கட்டணம் கேட்டால் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
தமிழக முதல்வர் கடந்த 1.9.2017-ல் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்கான எம்.பி.இ.ஜி- 4 தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையைத் தொடக்கி வைத்தார்.
முதல் கட்டமாக 32 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, அனைத்து செட்டாப் பாக்ஸ்களும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு விநியோகித்து செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். மேலும், விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இல்லங்களில் நிறுவி செயலாக்கம் செய்வற்காக ரூ. 200 மட்டும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விலையில்லா செட்டாப் பாக்ஸ் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ. 200-க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை செலுத்த தேவையில்லை. எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் சிக்னல் பெற்று பயன்பெறும் சந்தாதாரர்கள், இந்நிறுவனத்தின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை நிறுவும்போது கேபிள் ஆபரேட்டர்களிடம் ரூ. 200 மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் தொகை வசூலித்தால், கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் (1800 425 2911) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT