பெரம்பலூர்

மர்மக் காய்ச்சல்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல்

DIN

பெரம்பலூர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ முகாம் அமைக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சிறுகூடல் கிராமத்தில்  கடந்த சில நாள்களாகவே மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனராம். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 172 பேர், வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 35 பேர், முருக்கன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 27 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனராம். மேலும், நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனராம்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தும், மருத்துவ முகாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்றனராம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், சுகாதார அலுவலர்களையும் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய்த் துறையினர் அங்கு சென்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT