பெரம்பலூர்

25% ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர நலிவடைந்தோர் விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க விரும்புவோர் ஏப். 20 முதல் மே 18 ஆம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது ஆரம்ப வகுப்பில் மொத்தமுள்ள சேர்க்கைக்கான 25 சதவீத இடங்களுக்கு இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் எனும் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.  மேலும், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம்,  மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய உதவித் தொடக்க கல்வி அலுவலகங்களில் எவ்வித கட்டணங்களும் இன்றி இலவசமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT