பெரம்பலூர்

அருமடலில் புகைப்படக் கண்காட்சி

DIN

பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் கிராமத்தில் செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியில் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கிய நலத் திட்ட உதவிகளின் புகைப்படங்கள். பெரம்பலூர் மாவட்ட அரசு விழாக்களில் ஆட்சியர், பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர்கள், பெரம்பலூர், 
குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. 
இவற்றை அருமடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து, அரசின் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT