முகப்பு
பெரம்பலூர்

கல்லூரிப் பேருந்து வயலில் இறங்கி  7 மாணவர்கள் காயம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை தனியார் கல்லூரிப் பேருந்து வயலில் இறங்கி 7 மாணவர்கள் காயமடைந்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை தனியார் கல்லூரிப் பேருந்து வயலில் இறங்கி 7 மாணவர்கள் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் நாள்தோறும், கல்லூரி பேருந்தில் சென்று வருவர். இந்நிலையில், புதன்கிழமை காலை சுமார் 30 மாணவர்களுடன் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து, கீழப்பெரம்பலூர் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த வயலில் இறங்கியது
இதில், பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்களான விஜய், சரிதா, கஸ்தூரி, புனிதவதி, பூவரசன், தர்மதுரை ராயப்பன் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்த குன்னம் போலீஸார் மாணவ, மாணவிகளை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிந்து, கல்லூரி பேருந்து ஓட்டுநர் மாரிமுத்துவை கைது செய்து விசாரிக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →