திருட்டு வழக்குகளில் 3 இளைஞர்கள் கைது
பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ் (30), பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த இப்ராஹீம் மனைவி
பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ் (30), பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த இப்ராஹீம் மனைவி செரீபா (40) ஆகியோர், அண்மையில் நடந்து சென்றபோது, அவர்களிடமிருந்து நகை மற்றும் பணப் பைகளை மர்ம நபர்கள் சிலர் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருவண்ணாமலை மாவட்டம், காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ் (23), லட்சுமணன் மகன் பார்த்தீபன் (21), சங்கர் மகன் விக்னேஷ் ஆகியோர் இந்தத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, திருச்சியில் தங்கியிருந்த மேற்கண்ட 3 பேரையும் பெரம்பலூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட மூவர் மீதும் வழக்குப் பதிந்த போலீஸார் அவர்களிடமிருந்த 15 பவுன் நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.