முகப்பு
பெரம்பலூர்

மனுநீதி நிறைவு நாள் முகாமில்  ரூ. 1.70 கோடியில் நல உதவிகள்

எளம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 311 பயனாளிகளுக்கு ரூ. 1.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

Updated On : 29 மார்ச், 2018 at 7:00 AM
பகிர்:

எளம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 311 பயனாளிகளுக்கு ரூ. 1.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமத்தில் மனுநீதி நிறைவு நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:  
எளம்பலூர் ஊராட்சியை அனைத்து வசதிகளும் கொண்ட, தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர். 
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி பேசியது: 
இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட 249 மனுக்களில், 112 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றார் அவர். 
தொடர்ந்து, சமூக பாதுகாப்புத் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை, மாற்றத்திறனாளி நலத்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 311 பயனாளிகளுக்கு ரூ. 1,70,68,838 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பெரியசாமி, வேளாண்துறை உதவி இயக்குநர் கீதா, வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.