பெரம்பலூர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு: பெரம்பலூரில் 94% தேர்ச்சி: மாநில அளவில் 12 ஆவது இடம்

DIN

பிளஸ் 2  அரசுப் பொதுத்தேர்வில் 94.10 சதவீதம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம, மாநில அளவில் 12 ஆவது இடம் பெற்றுள்ளது.
பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 4,495 மாணவிகளும், 4,370 மாணவர்களும் என மொத்தம் 8,865 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினர். இதில் 4,063 மாணவர்களும், 4,279 மாணவிகளும் என மொத்தம் 8,342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இதில் ஆண்கள் 92.97 % தேர்ச்சியும், பெண்கள் 95.19 % தேர்ச்சியும் என பெரம்பலூர் மாவட்டம் 94.10 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 12 ஆவது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் 93.54 சதவீதத் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 15 வது இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், நிகழாண்டு 0.56 சதவீதம் கூடுதல் பெற்று 3 இடங்கள் முன்னேறி 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
4 அரசுப் பள்ளிகள் உள்பட 24 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 70 மேல்நிலைப் பள்ளிகளில் 4 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 24 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. லப்பைக்குடிகாடு (பெண்கள்), எளம்பலூர், கவுள்பாளையம் மற்றும் கிழுமத்தூர் மாதிரி அரசுப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.  எறையூர் நேரு பள்ளி, உடும்பியம் ஈடன் கார்டன், அகரம்சீகூர் லிட்டில் பிளவர், பெரம்பலூர் மெளலானா, எம்.ஆர்.வி. , ராஜவிக்னேஷ் , ஸ்ரீராகவேந்திரா, ஸ்ரீசாரதாதேவி, தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி, ஈடன்கார்டன் மெட்ரிக். பள்ளி, கோல்டன் கேட்ஸ், ஹயக்கிரிவா, விஸ்டம் ,  சரஸ்வதி வித்யாலயா, சாந்தி நிகேதன், ஸ்ரீஅம்பாள்ஸ், ஸ்ரீராமகிருஷ்ணா, செயின்ஜோசப், புனித ஆன்ட்ரூஸ், சுவாமி விவேகானந்தா ஆகிய மெட்ரிக். பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT