முகப்பு
பெரம்பலூர்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 22 மே, 2018 at 2:51 AM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து,வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் 21ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்திருந்தனர்.  அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 53 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் 53 செயலர்கள் உள்பட 165 பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் 53 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் பூட்டிப்பட்டிருந்தன.  இதனால், வங்கிப் பணிகள், பொதுமக்களுக்கான வங்கிச்சேவை பாதிக்கப்பட்டது. இந்த விடுப்பு போராட்டம் மே 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.