முன்னாள் படைவீரர் வாரிசுகள் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசுப் பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும்
பெரம்பலூர் மாவட்டத்தில் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசுப் பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பரிசு பெற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல் மற்றும் 2-ஆம் இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரமும், ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் மூலம் ஏற்கெனவே பெறப்பட்ட ஆவணங்களின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 1,200-க்கு 1,034 மதிப்பெண்களும், இரண்டாம் மதிப்பெண் 1,200-க்கு 1,028 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். எனவே, பிளஸ் 2 தேர்ச்சியுற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் மேற்கண்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அக். 15-க்குள் அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச்சான்று, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.