பெரம்பலூர்

மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை பொறியியல் துறை மூலம், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2018-19 ஆம் நிதியாண்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்த ரூ. 316.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
டிராக்டர்கள், பவர் டில்லர்கள், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் இயந்திரம், சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், டிராக்டரால் இயங்கம் தெளிப்பான், துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் மானிய உதவியுடன் வாங்கி பயன்பெறலாம்.
வட்டார அளவிலான அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. விவசாயிகள், விவசாயக் குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் பயனாளிகள் ஆவர். ரூ. 25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் என, வேளாண் துறையினரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT