மின் வாரிய பணிக்கு விண்ணப்பித்தோருக்கு கயிறு கட்டுதல், கம்பம் ஏறுதல் பயிற்சி
சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மின்வாரிய பணிக்காக விண்ணப்பித்த நபர்களுக்கு கயிறு கட்டுதல்
சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மின்வாரிய பணிக்காக விண்ணப்பித்த நபர்களுக்கு கயிறு கட்டுதல் மற்றும் கம்பம் ஏறும் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்களுக்கு 2,900 நபர்களை தேர்ந்தெடுக்க டான் ஜெட்கோ முடிவெடுத்து, எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. அதனடிப்படையில், மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், தேர்வுக்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கள உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றிபெறுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஜூலை 27 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எம். கருப்பையா, செயற்பொறியாளர் க. ராஜமாணிக்கம் ஆகியோர் பயிற்சியை தொடக்கி வைத்து பேசினர். நிகழ்ச்சியில், துணை செயலர் எஸ். ரெங்கராஜன், வட்ட செயலர் எஸ். அகஸ்டின, ஒருங்கிணைப்பாளர் ஜே. ஆல்பர்ட், வட்டத் தலைவர் கண்ணன், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் நல்லுசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.