பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலான மழை

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலான மழை பெய்தது. 
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. இரவு 9 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பரவலான மழை பெய்தது. தொடர்ந்து, நள்ளிரவு ஆங்காங்கே பலத்த மழையும், ஒருசில இடங்களில் பரவலான மழையும் பெய்தது. அதன்படி, செட்டிக்குளத்தில் அதிகபட்சமாக 96 மி.மீ மழை பெய்தது. பெரம்பலூரில் 18 மி.மீட்டரும், வேப்பந்தட்டையில் 2 மி.மீட்டரும், தழுதாழையில் 9 மி.மீட்டரும், பாடாலூர் பகுதியில் 31 மி.மீட்டரும் என மொத்தம் 156 மி.மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், சாலை ஓரங்களிலும், வடிகால் வாய்க்கால்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பெய்த மழையால் குளிர் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, இந்த மழையைக்கொண்டு விவசாயிகள் சிலர் மானாவாரி சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT