பெரம்பலூர்

நக்கசேலம் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

DIN

பெரம்பலூர் மாவட்டம், நக்கசேலம் கிராமத்தில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட நக்கசேலம் வருவாய் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நாரைக்கிணறு குளம் உள்ளது. இந்தக்குளம் பல ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நீர் நிலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து, கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். 
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வருவாய்த்துறையினர் கள ஆய்வு செய்து நாரைக் கிணற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT