பெரம்பலூர்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் சாவு

DIN


பெரம்பலூர் அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 
    பெரம்பலூர் அருகேயுள்ள வி.ஆர்.எஸ்.எஸ். புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் அர்ச்சுனன் (45).
 இவர், சனிக்கிழமை இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர் பந்தல் எனும் இடத்தில் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, மதுரையிலிருந்து நெய்வேலி நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அர்ச்சுனன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்குசென்று அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரத்தினசபாபதி மகன் வெங்கடேசனை (52) கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT