பெரம்பலூர்

அகவிலைப்படி வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

DIN

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க தலைமை நிலையச் செயலர் கே. மணி வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விலைவாசி உயர்வுக்கேற்ப,  ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவிகித அகவிலைப்படி உயர்வை வழங்கியுள்ளது. இதன்மூலம், மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெறுகிறார்கள். கடந்த காலங்களில் தேர்தல் விதிமுறைகள் இருந்தபோதும், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. 
எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவிகித அகவிலைப்படியை வழங்க ஆவண செய்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT