பெரம்பலூர்

சுயதொழில் தொடங்க திருநங்கைகளுக்கு கடனுதவி

DIN

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற  மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 10 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா கடனுதவிகளை வழங்கினார்.
ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 227 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சமூக நலத்துறை சார்பில் காய்கறி, பழ வியாபாரங்கள், கறவை மாடு மற்றும் ஆடு வளர்த்தல் உள்ளிட்ட சுயதொழில் தொடங்குவதற்காக 10 திருநங்கைகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் மதிப்பில்  காசோலைகளை ஆட்சியர் சாந்தா வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சேதுராமன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பூங்கொடி, மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT