பெரம்பலூர்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிக்கான பரிசளிப்பு

DIN

பெரம்பலூர் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது. 
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வித்துறை, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இந்தோ அறக்கட்டளை ஆகியவை இணைந்து, பெரம்பலூர் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு புதன்கிழமை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. அருளரங்கன் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். 
இதில்,  6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை என இருபிரிவுகளாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில், ஒவ்வொரு பிரிவிலும் தலா முதல் 3 இடங்களை பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், இந்தோ அறக்கட்டளை பணியாளர்கள் மதுபாலன், சண்முகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜ. முகமது உசேன் வரவேற்றார். இந்தோ அறக்கட்டளை மேலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT