பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை மாசூபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
அரசு உத்தரவின்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனடிப்படையில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை மாசூபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை தொடக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பின்னர், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து, தூய்மை பணியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு மற்றும் சுற்றுசூழல் உதவிப்பொறியாளர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் வினோத், பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள்:
தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியது:
மத்திய அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 63,251 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்படுகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா, மா. சந்திரகாசி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.