பெரம்பலூர்

தேசிய டேக்வாண்டோ: விளையாட்டு விடுதி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

DIN

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவி ம.சபிதா வெண்கலப் பதக்கம் வென்றார்.
நீலகிரி மாவட்டம், நெடுகுவா அருகிலுள்ள ஜக்கக்கம்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி மகள் சபீதா (16).  இவர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூரில் செயல்பட்டு வரும் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி, இங்குள்ள பள்ளியொன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், விடிசாவில் ஜன.2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கானதேசிய டேக்வாண்டோ போட்டியில், தமிழக அணியின் சார்பில் 49-59 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றார் சபீதா.
ஏற்கெனவே 9 ஆம் வகுப்பு பயிலும் போதே தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற 17 ஆவது தேசிய அளவிலான போட்டியில் 38-41 கிலோ எடைப்பிரிவில் தமிழக அணி சார்பில் பங்கேற்று சபீதா வெண்கலப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர மாநில அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார்.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதால், தமிழக அரசு வழங்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையைப் பெறவும் சபீதா தகுதி பெற்றுள்ளார்.
சிறப்பிடம் பெற்ற மாணவி சபீதாவை  மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் கு. அருளரங்கன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா, டேக்வாண்டோ பயிற்றுனர் தர்மராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT