முகப்பு
பெரம்பலூர்

சிறுவாச்சூர் பகுதியில் ஜனவரி 24 மின் தடை

மாதாந்திர மின் பராமரிப்புப்பணிகள் காரணமாக சிறுவாச்சூர் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.24) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 23 ஜனவரி 2019, 7:25 am IST
பகிர்:

மாதாந்திர மின் பராமரிப்புப்பணிகள் காரணமாக சிறுவாச்சூர் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.24) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்  உதவிச் செயற்பொறியாளர் ரா. அசோக்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறஉள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், குரூர், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுள்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர் உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.