பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தொடக்கி வைத்தார்.
கருத்தாளர்கள் திலீப், விஜயகுமார் ஆகியோர் கற்றலில் குறைபாடுடைய மாணவ, மாணவிகளுக்கு எளிமையாக கற்பிப்பது குறித்து
பயிற்சி அளித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 76 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள், பெரம்பலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பயிற்சியில் பங்கேற்றனர்.