பெரம்பலூர்

விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா

DIN

பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், சுப்ரமணியர், மஹா மாரியம்மன், கருப்பையா, ஆகாசதுரை, மதுரைவீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவையொட்டி, கடந்த 15ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், மஹா தீபாராதணையும், மாலை 6 மணிக்கு மேல் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு, காப்புக் கட்டுதல், முதல்கால யாக வேள்வி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. 
16 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 2 ஆம் கால யாக வேள்வியும், கலச பூஜை, மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி பூஜையும், மாலை 6 மணிக்கு மேல் 3 ஆம் கால யாக பூஜையும், விநாயகர் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.  தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பூர்வாங்க பூஜைகள், கலச பூஜை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடும், காலை 9 முதல் 9.30 மணிக்குள் விநாயகர், சுப்ரமணியர், மஹா மாரியம்மனுக்கு குட முழுக்கு விழாவும், 9.45 முதல் 10.15 மணிக்குள் கருப்பையா, ஆகாசதுரை, மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது. முன்னதாக, புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கலசங்களுக்கு தெளிக்கப்பட்டது. 
என். மணிகண்டன் அய்யர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனர். 
இதில், எசனை, கோனேரிப்பாளையம், பெரம்பலூர் உள்பட சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோனேரிப்பாளையம் கிராம மக்கள் செய்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT