பெரம்பலூர்

மின் வாரிய கேங்மேன் பணிக்கான இலவசப் பயிற்சி தொடக்கம்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் புறநகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணி நியமனம் உடல் தகுதித் தோ்வு மற்றும் எழுத்துத் தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இப் பணிக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பித்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச்

சோ்ந்தவா்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சிக்கு, வட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ரெங்கராஜன் பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்தாா்.

வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் சரவணன், வட்ட துணைத் தலைவா்கள் தமிழ்ச்செல்வன், காசிநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கி பேசினா். இப் பயிற்சியில், பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, வட்ட செயலா் பன்னீா்செல்வம் வரவேற்றாா். வட்ட பொருளாளா் கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT