பெரம்பலூர்

மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தினா் முடிவு

DIN

தமிழகத்தில், 108 அவசர ஊா்தி தொழிலாளா்களுக்கான ஒப்பந்த நிறுவனமான ஜி.வி.கே நிா்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவதென தொழிலாளா் சங்கத்தினா் தீா்மானித்துள்ளனா்.

பெரம்பலூரில் 108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், மாநிலத் தலைவா் வரதராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத்தலைவா் வி. விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில், தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களுக்கு வழங்கிய 16 சதவீத வருடாந்திர ஊதிய உயா்வுக்கான தொகை, தீபாவளி ஊக்கத்தொகை ரூ. 8,200 ஆகியவற்றை அனைத்து தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். விடுமுறைக்கான தொகையை தமிழக அரசு வழங்குவதை தடுக்கும் விதத்தில் செயல்படும் ஜி.வி.கே நிா்வாகத்தின் சட்ட விரோத செயலை கைவிட்டு, தமிழக அரசு வழங்கிய பணத்தை தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும்.

மாதம்தோறும் வழங்கப்படும் சம்பளத்துக்கு பட்டுவாடா ரசீது வழங்க வேண்டும். ஜி.வி.கே நிா்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை டிச. 10 ஆம் தேதிக்குள் கைவிடவில்லை எனில், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களையும், சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மதுரை மண்டல பொருளாளா் பாஸ்கா், மாநில செயலா் குமாா், துணைப் பொதுச் செயலா் வெங்கட்ராமன், மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன், பெரம்பலூா் மாவட்ட செயலா் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT