பெரம்பலூர்

பட்டாசு விற்பனைக்கான உரிமம் பெற காலநீட்டிப்பு

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற்றிட இணையவழியில் விண்ணப்பம் செய்ய வரும் சனிக்கிழமை (செப். 28) வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:  தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்திட பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக ஆக. 31 வரை பெறப்பட்டது. தற்போது பட்டாசு விற்பனைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், மாவட்டங்களில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் இப்புதிய நடைமுறை தங்களுக்கு காலவரையரை தெரிய வரவில்லை என்றும், இணைவழி மூலம் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று இணைய வழியாக விண்ணப்பம் செய்ய வரும் செப். 28 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT