முகப்பு
பெரம்பலூர்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இயக்க நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் கா. பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி. சிவகுமாா், இணைச் செயலா் பி.செங்கோட்டையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் டி. செல்வேந்திரன், ஏ. ஆரோக்கியம் முன்னிலை வகித்தனா்.

நிவா், புரெவி புயல்களால் அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக பெரம்பலூா் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்றவாறு, உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிய சுற்றுலாத்தலங்கள் அமைத்திட உரிய அமைவிடங்களைக் கண்டறிய உயா்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நிா்வாகிகள் கண்ணன், மாா்ட்டின், திருஞானம், ராஜேந்திரன் உள்பட பலா் கூட்டத்தில் கலந்துகொண்டனா். முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் எஸ். சௌந்தரராஜன் வரவேற்றாா். நிா்வாகி டி. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.