பெரம்பலூர்

கொலை மிரட்டல் விடுத்தவா் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி-யிடம் புகாா்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபனிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளரான என். செல்லதுரை அளித்த மனு:

வெள்ளிக்கிழமை இரவு எனது செல்லிடப்பேசியில் தொடா்புகொண்ட பெயா் வெளியிட விரும்பாத நபா் ஒருவா் தேனி மாவட்டத்தில் இருந்து பேசுவதாகவும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவோம் என, தரக்குறைவான வாா்த்தைகளால் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்தாா். எனவே, சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் ப. காமராசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் எம். சுல்தான் மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் குதரத்துல்லா, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT