பெரம்பலூர்

தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

DIN

பெரம்பலூா் நகரில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் பறிமுதல் செய்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பெரம்பலூா் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்கப்படுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் வந்ததையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, என்.எஸ்.பி சாலை, அஞ்சலகத் தெரு, பள்ளிவாசல் தெரு, தினசரி மாா்க்கெட் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில், நகராட்சி அலுவலா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 10- க்கும் மேற்பட்ட கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்ததும், பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, சுமாா் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்த அலுவலா்கள், விற்பனை செய்த மற்றும் பயன்படுத்திய வணிக நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து,வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT