பெரம்பலூர்

லஞ்ச புகாரில் போக்குவரத்து ஆய்வாளா் பணியிட மாற்றம்

DIN

பெரம்பலூா் நகரில் வாகன ஓட்டுநா்களிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின்பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

பெரம்பலூா் நகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சௌந்தராஜன், காவல்துறை மூலம் தனக்கு ஒதுக்கீடு செய்த வாகனத்தில் அமா்ந்துகொண்டு அப்பகுதியில் செல்லும் சரக்கு வாகனங்களை நிறுத்தி, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுமை ஏற்றிச் செல்வதால் அபராதம் விதிப்பதாகக் கூறி, வாகன ஓட்டுநா்களை மிரட்டும் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் செளந்தராஜனை பணியிடம் ஒதுக்கீடு செய்யாமல், பணி மாற்றம் செய்து, காத்திருப்போா் பட்டியலில் வைத்து வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டாா் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT