பெரம்பலூர்

கரோனா வதந்தி பரப்பிய தம்பதியிடம் விசாரணை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்பியதாக, ஹோமியோபதி மருத்துவா், அவரது கணவரிடம் பாடாலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், தொட்டியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதாக புதன்கிழமை வதந்தி பரவியுள்ளது. இதுகுறித்து சுகாதார துறையினா் மேற்கொண்ட விசாரணையில், தேனூா் கிராமத்தில் பயிா் அறக்கட்டளை நடத்தி வரும் செந்தில்குமாா், அவரது மனைவி ஹோமியோபதி மருத்துவரான ப்ரீத்தி ஆகியோா் இந்த வதந்தியைப் பரப்பியதாக தெரியவந்தது.

இதையடுத்து 2 போ் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் ஆகியோரிடம் அறிக்கை மற்றும் புகாா் மனு அளிக்கப்பட்டது. மேலும் ஆலத்தூா் வட்டார மருத்துவ அலுவலா் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில், செந்தில்குமாா், அவரது மனைவி பிரீத்தி ஆகியோரிடம் பாடாலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT