பெரம்பலூர்

ஊரடங்கு மீறல்: பெரம்பலூரில் 12 போ் மீது வழக்கு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில், 144 ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரம்பலூா் மாவட்ட எல்லைகளை தாண்டக்கூடாது, 5 பேருக்கும் மேலாக ஒன்றுகூடி நிற்கக்கூடாது, அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோா் மீது வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதாக பெரம்பலூரில் ஒரு வழக்கும், பாடாலூரில் 3 வழக்குகளும், மங்களமேடு காவல் நிலையத்தில் 8 வழக்கும் என, மொத்தம் 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT