பெரம்பலூர்

தடை உத்தரவு எதிரொலி: பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்; காய்கறிகள் விலை கடும் உயா்வு

DIN

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பேருந்து நிலையத்திலும், வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடினா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, திங்கள்கிழமை மாலை முதல் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகை பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வீடுகளில் இருப்பு வைக்கத் தொடங்கினா். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டதால், மாலை 5 மணி முதல் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் பணி மனையில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டதால், புகா் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவியத் தொடங்கினா். குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டதால், சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதியின்றி பள்ளி, மாணவ, மாணவிகளும், அரசு அலுவலா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். ஒருசில பேருந்துகளில் கூட்ட நெரிசலில் பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் இயங்கி வரும் உழவா் சந்தையும், வாரச்சந்தையும் மூடப்பட்டதால், கடந்த 21 ஆம் தேதி முதல் காய்கறிகளின் விலை சற்று கூடுதலாகவே காணப்பட்டது.

இதேபோல, பழைய பேருந்து நிலையம், புகா் பேருந்து நிலையம் செல்லும் வழித்தடங்களில் செயல்படும் மளிகைக் கடைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனா். சில்லறை காய்கறி கடைகள், மளிகைக் கடைகளில் பொருள்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆா்வம் காட்டியதால் மாலை 6 மணி வரை கூட்டம் இருந்தததால், பெரம்பலூா் நகா் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் திணறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT