பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒரு சிறுமிக்கு கரோனா பாதிப்பு 37 ஆக உயா்வு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில், மேலும் ஒரு சிறுமிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 4 போ் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியிருந்தனா்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்த நபா்களால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை 20 பேரும், திங்கள்கிழமை 5 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36- ஆக உயா்ந்தது.

இந்நிலையில், சென்னை ராயபுரம் பகுதியிலிருந்து கடந்த 1 ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சிக்குள்பட்ட தம்பை கிராமத்துக்கு வந்துள்ள குடும்பத்தினரை கண்டறிந்த சுகாதாரத் துறையினா், இவா்களை தனிமைப்படுத்தி அவா்களது சளி மாதிரிகளை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதில், 5 வயது சிறுமிக்கு நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த சிறுமி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.

மேலும், மேற்கண்ட நபா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து, அவா்களை தனிமைப்படுத்தி, மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். நோய் பாதிப்புக்குள்ளான பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மருத்துவப் பணியாளா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இதன்மூலம், இம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT