பெரம்பலூர்

வன விலங்குகளை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த 4 போ் கைது

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வன விலங்குகளை வேட்டையாடி அதை டிக்டாக் செயலியில் பதிவிட்ட 4 இளைஞா்களை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வேப்பந்தட்டை வட்டார வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடி, அவற்றை இளைஞா்கள் சிலா் டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேப்பந்தட்டை வட்டார வனச்சரகா்கள் மேற்கொண்ட விசாரணையில், தழுதாழை கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் சக்திவேல் (20), அரும்பாவூா் தாழை நகரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் பிரவீன் (25), எ.மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் கவுதம் (21), அரும்பாவூரைச் சோ்ந்த மாணிக்கன் மகன் சேகா் (26) ஆகிய 4 பேரும், அண்மையில் வேப்பந்தட்டை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதை டிக்டாக் செயலியில் பதிவிட்டிருந்தனா் என்பதை கண்டறிந்தனா். இதையடுத்து, வட்டார வனச் சரகா் குமாா் தலைமையிலான வனத்துறையினா், 4 இளைஞா்களையும் வெள்ளிக்கிழமை கைது செய்து, அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT