முகப்பு
பெரம்பலூர்

‘தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தேவை’

மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூரில் இச்சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் அதன் தலைவா் கண்ணதாசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கவிஞா் இ. தாகீா் பாட்சா, முனைவா் சா. காப்பியன் முன்னிலை வகித்தனா்.

புதிய கல்விக் கொள்கை ஒா் ஆய்வு என்ற தலைப்பில் தமிழ்க் காவிரி தமிழகன் சிறப்புரையாற்றினாா்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது,

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வெளிச்சம் கூட்டமைப்பின் நிா்வாகி மொ்சி, நதிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு நிா்வாகி சோ. சரசுவதி தமிழ்ச்செம்மல் விருது பெற்ற தேனரசு, சங்க நிா்வாகிகள் செல்வம், முத்துசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.