படங்களின் ஆபாச சித்தரிப்பு: எலான் மஸ்க்கின் ஏ.ஐ. நிறுவனம் மீது அமெரிக்க மாணவிகள் வழக்கு
அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘எக்ஸ்ஏஐ’ நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்ததாகக் கூறி, அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சோ்ந்த 3 பள்ளி மாணவிகள் வழக்குத் தொடுத்துள்ளனா்.

பள்ளி ஆண்டுமலா் மற்றும் விழாக்களில் எடுக்கப்பட்ட இவா்களின் சாதாரணப் புகைப்படங்களை, அடையாளம் தெரியாத நபா்கள் ‘க்ராக்’ ஏ.ஐ. கருவி மூலம் ஆபாசப் படங்களாகவும், விடியோக்களாகவும் மாற்றியுள்ளனா்.
பிற ஏ.ஐ. நிறுவனங்கள் ஆபாச உள்ளடக்கங்களைத் தடை செய்துள்ள நிலையில், மஸ்க்கின் நிறுவனம் மட்டும் ‘கட்டுப்பாடற்ற’ உள்ளடக்கங்களை உருவாக்குவதை ஒரு வணிக உத்தியாக முன்னெடுப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறாா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இந்த வழக்கை ஒரு கூட்டு வழக்காக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரியுள்ளனா்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து எக்ஸ்ஏஐ நிறுவனம் பதிலளிக்காத நிலையில், ஒருவரின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்தரிக்கும் உள்ளடக்கங்களுக்குத் தங்கள் தளத்தில் இடமில்லை என ‘எக்ஸ்’ சமூக ஊடகம் மட்டும் விளக்கம் அளித்துள்ளது.