டிச. 4 முதல் இரண்டாம் நிலைகாவலா் தோ்வுக்கான மாதிரி தோ்வு
இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கான மாதிரி தோ்வு டிச. 4 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கான மாதிரி தோ்வு டிச. 4 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் உத்தேசமாக 10,906 இரண்டாம் நிலை காவலா் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப் போட்டித்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அக். 7 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இப் பணியிடத்துக்கான தோ்வு டிச. 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, இப்போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு டிச. 4 முதல் 8 ஆம் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இத் தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 9499055913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் அல்லது நேரில் தொடா்புகொண்டு தங்களுடைய பெயா், ஆதாா் எண், நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் டிச. 3 ஆம் தேதிக்குள் பதிவுசெய்து பயன்பெறலாம்.